search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெலுங்கானா முதல் மந்திரி"

    தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் ரூ.22 கோடி சொத்து உள்ளதாக தனது வேட்புமனு தாக்கலில் தெரிவித்து உள்ளார். #ChandrasekharRao
    நகரி:

    தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் வருகிற டிசம்பர் 7-ந்தேதி நடக்கிறது.

    இதில் ஆட்சியை மீண்டும் தக்க வைக்க சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி தீவிரமாக உள்ளது.

    முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் கெஜ்லால் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதில் சந்திரசேகரராவ் தனது சொத்து கணக்குகளை தெரிவித்து உள்ளார்.

    அவருக்கு ரூ.22 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. தான் விவசாய தொழில் செய்து வருவதாகவும், ஆண்டு வருமானம் ரூ.31.5 லட்சம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    விவசாய தொழிலில் ரூ.3.2 கோடியை முதலீடு செய்து உள்ளதாகவும், பண்ணை வீடுகள் மதிப்பு ரூ.6.5 கோடி என்றும் தெரிவித்துள்ளார். ரொக்கமாக ரூ.1.3 கோடி இருப்பதாக கூறி உள்ளார்.

    மேலும் அவர் தனியார் கம்பெனிகளிலும் முதலீடு செய்துள்ளார்.

    சந்திரசேகரராவ் தனக்கு சொந்தமாக கார் இல்லை என்று வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். அவரது கட்சியின் சின்னம் கார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சந்திரசேகரராவுக்கு சொந்தமாக கார் இல்லை என்பது சுவாரசியமாக பார்க்கப்படுகிறது.

    அவரிடம் கார் இல்லாமல் இருந்தாலும் அவரது பாதுகாப்புக்காக அரசு சார்பில் சொகுசு கார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

    சந்திரசேகரராவ் ரூ.2.4 லட்சத்துக்கு நகைகள் வைத்துள்ளார். அவரது மனைவிக்கு ரூ.96 லட்சம் மதிப்பில் நகை இருக்கிறது. அவரது மகன் கே.டி.ராமராவ் ரூ.84 லட்சமும், மருமகள் ‌ஷலிமா ரூ.24 லட்சமும் ரொக்கம் வைத்துள்ளனர்.

    கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் வேட்புமனுவை தாக்கல் செய்த சந்திரசேகர ராவ் ரூ.15 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்து இருந்தார். தற்போது 4 வருடத்தில் அவரது சொத்து மதிப்பு ரூ.7 கோடி உயர்ந்துள்ளது.

    இதேபோல் 2014-ம் ஆண்டு 37 ஏக்கர் நிலம் இருந்ததாக தெரிவித்து இருந்தார். தற்போது 54 ஏக்கர் விவசாய நிலம் வைத்திருக்கிறார். #ChandrasekharRao
    தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் ரயில்வே திட்டங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து பேசியுள்ளார். #Modi #ChandrashekarRao
    புதுடெல்லி:

    தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் ரயில்வே திட்டங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து பேசியுள்ளார்.

    தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ், நாட்டில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இல்லாத மாற்றி அணி உருவாக வேண்டும். அரசியலில் தரமான மாற்றத்தை கொண்டு வர வேண்டும். அதுபோன்ற ஒரு அரசியல் மாற்று அணிக்கு தலைமை ஏற்க தான் தயாராக உள்ளதாக கூறியிருந்தார்.

    நல்லதொரு தரமான மாற்றத்துடன் தேசிய அரசியலில் தான் பங்கேற்கவும் ஆர்வமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தொடர்ந்து ஆட்சி செய்ததில் நாட்டுக்கு எந்தவித முன்னேற்றத்தையும் அளிக்கவில்லை என தெரிவித்தார்.

    இந்தநிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்தித்து பேசினார். அப்போது தனி உயர்நீதிமன்றம், ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த சந்திப்பு நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. #Modi #TelanganaCM #ChandrashekarRao
    ×